Advertisement

Responsive Advertisement

ஜகார்டாவிற்கு கொண்டுவரப்பட்டது மயூரன் மற்றும் சானின் உடல்கள்.

புதன்கிழமை அதிகாலை வேளை இந்தோனேசியா நுசகம்பங்கன் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அவுஸ்திரேலிய இளைஞர்களின் சடலங்கள் தலைநகர் ஜகார்டாவில் உள்ள பிரேத அறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

துப்பாக்கியால் சுடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 கைதிகளில் 6 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சானின் உடல்கள் அவர்களது இறுதி ஆசைப்படி அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து 8 கிலோகிராம் போதைப்பொருள் கடத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்ட 9 பேரில் அவுஸ்திரேலியர்கள் இருவரும் அடங்குவார்கள்.
இதனைத்தொடர்ந்து குறித்த குற்றவாளிகளுக்கு விதிக்கப்படவுள்ள மரணதண்டனையை நீக்கக் கோரி அவுஸ்திரேலிய அரசு இந்தோனேசிய ஜனாதிபதிக்கு வலியுறுத்தியும் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று(புதன்கிழமை) அதிகாலையில் நுசகம்பங்கன் சிறைச்சாலையில் மரண தண்டனைக் கைதிகள் 8 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் மரணதண்டனைக் கைதியாகவிருந்த பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பெண்ணிற்கு இறுதி நிமிடத்தில் மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டது.
மேலும் அவுஸ்திரேலியாவின் கோரிக்கைகளை நிராகரித்து இந்தோனேசியா மரணதண்டனை வழங்கியதால் அங்குள்ள தம்நாட்டு இராஜ தந்திரிகளை அவுஸ்திரேலிய அரசு நாட்டுக்கு மீண்டும் அழைத்துள்ளது.
இதேவேளை இந்தோனேசியாவின் இந்த செயற்பாட்டால் தம் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அவுஸ்திரேலியா, இந்த விரிசல் வர்த்த உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Daka

Post a Comment

0 Comments