Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்த முதல் ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடித்த மைத்திரி!– சுமந்திரன்

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய இணங்கிய முதல் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்தின் முதல் பேச்சாளராக உரையாற்றிய நான், ஜனநாயகத்தின் முடிவு இதுவெனக் குறிப்பிட்டேன்.
இன்று 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய விவாதம் நடத்தப்படுகின்றது அதில் பங்கேற்கக் கிட்டியமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட பலரும் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக கூறியிருந்தனர்.
எனினும் எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய இணக்கம் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தியவர் என்ற ரீதியில் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments