ஐபிஎல்-8 வது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் சரியாக விளையாடவில்லை என சர்ச்சை எழுந்து உள்ளது.
ஐபிஎல் சீசன் 8 போட்டிகளில் விளையாடிஉள்ள போட்டிகளை பார்க்கையில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடும் அஜின்கெய ரஹானே 323 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் 317 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த டிவைன் ஸ்மித் 253 ரன்களும், பிரண்டன் மெக்குல்லம் 251 ரன்களும் எடுத்து உள்ளனர் மும்பை இந்தியன் அணி கேப்டன் ரோகித் சர்மா 244 ரன்கள் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார்.
ஆனால் அதிக விலைக்கு ஏலம் எடுக்கபட்ட வீரர்கள் மிகவும் மோசமான விளையாட்டையே வெளிப்படுத்தி உள்ளனர். டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ரூ.16 கோடிக்கு யுவராஜ் சிங் ஏலம் எடுக்கபட்டு உள்ளார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போனவர் இவர் தான். யுவராஜ் சிங் 7 போட்டிகளில் விளையாடி மொத்தம் 124 ரன்கள் எடுத்து உள்ளார். பந்து வீச்சில் விக்கெட்டுகள் எதுவும் எடுக்க வில்லை .பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கபட்டவர் தினேஷ் கார்த்திக். இவர் ரூ.10. 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் 6 போட்டிகளில் விளையாடி 43 ரன்கள் எடுத்து உள்ளார். கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் 7 செய்து உள்ளார்.
அடுத்தபடியாக டெல்லி டேர் டெவில் அணிக்காக இலங்கை வீரர் ஆங்கிலோ மேத்யூ ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவர் 6 போட்டிகளில் விளையாடி மொத்தம் 93 ரன்கள் எடுத்து உள்ளார். பந்து வீச்சு மூலம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
அதே அணியில் ரூ. 4 கோடிக்கு ஜாகீர்கான் எடுக்கபட்டு உள்ளார். இதுவரை அவர் இன்னும் விளையாட மைதானத்திற்குள் இறங்கவே இல்லை. காயம் காரணமாக அவர் விளையாட வில்லை என கூறப்படுகிறது. அதே அணியில் அமித் மிஸ்ரா ரூ.3.5 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டார். அவர் 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகள் எடுத்து உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த டிரண்ட் போல்ட் ரூ. 3.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். ஆனால் 5 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். இதில் அதிகம் பாதிக்கபட்டது டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூர் அணியும்தான்.
0 Comments