Advertisement

Responsive Advertisement

பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனத்திலும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இடம்

தமிழகத்தை தவிர்த்து இலங்கைக்கு வெளியில் அதுவும் மேற்கத்தைய அதாவது பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனம் ஒன்றில் முதல்தடவையாக இலங்கை தமிழர் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தேர்தல் களத்தில் பிரதமர் டேவிட் கெமரோன் தலைமையிலான கொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ம் 77ம் பக்கங்களில் இந்த விடயம் அடங்கியுள்ளது.
அதில் “நாங்கள் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் உட்பட போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளை ஊக்குவிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் டேவிட் கெமரோன் மேற்கொண்ட வரலாற்றுப்புகழ் விஜயத்தை அடுத்தே இந்த விடயம் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்த தேர்தல் கொள்கைப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments