கொழும்பின் பல்வேறு இடங்களில் இருந்து உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்களால் பொலிஸார் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து ஏதேனும் தகவல்களை அறிந்திருப்பின், உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்திற்கு அல்லது வெலிக்கடை அல்லது மிரிஹான பொலிஸ் நிலையங்களுக்கு தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த வாரத்திற்குள் கொழும்பிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் சடலங்கள் மற்றும் உடற் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கமைய, உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்தந்த பிரதேசங்களுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் மற்றும் உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணைகளுக்கு உதவுமுகமாக, தமது உறவினர்கள் எவரேனும் காணாமற் போயிருப்பின், அதுகுறித்து பொலிஸாருக்கு அறியத்தருமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



0 Comments