Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடு முழுவதும் போலி நாணயத்தாள் புழக்கத்தில்: பொலிஸார் எச்சரிக்கை

நாடு முழுவதும் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இரண்டாயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. அதிகளவில் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கேகாலை, வெயாங்கொட, வாத்துவ, பாணந்துறை, கம்பஹா,அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் கடந்த இரண்டு மாதங்களாக போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கேகாலை நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் 5 ஆயிரம் போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேலும் 22 போலி நாணயத்தாள்களுடன் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments