2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த க. பொ. த. பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற முதல் 10 பேர் என்ற பட்டியலில் எந்தவொரு தமிழ் முஸ்லிம் மாணவர்களின் பெயரும் உள்ளடங்கவில்லை. க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற 10 பேரின் பட்டியலில் சிங்கள மொழி மூல பாடசாலைகளின் மாணவர்கள் பெயர்கள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன.
|
அதேவேளை, கொழும்பில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 9 ஏ பெற்று 14 மாணவர்கள் சித்தியடை ந்துள்ளனர். பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் 9 ஏ பெற்று 14 மாணவிகளும், வேம்படி மகளிர் கல்லூரியில் 9 ஏ பெற்று 28 மாணவிகளும். வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் 9 ஏ பெற்று 25 மாணவிகளும் திருமலை கோணேஸ்வரா வித்தியாலயத்தில் 9 ஏ பெற்று 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இதேவேளை வெளியாகிய பரீட்சை முடிவுகளின்படி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் 28 மாணவிகள் 9 ஏ தரத்தில் சித்தியடைந்துள்ளனர். அதேநேரம் 49 மாணவிகள் 8ஏ சித்தி களைப் பெற்றுள்ளதாக அதிபர் வேணுகா சண்முகரத்தினம் அறிவித்துள்ளார்.
இப்பரீட்சைக்கு தோற்றியவர்களின் வினாத்தாள் மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப்படிவங்கள் பரீட்சை முடிவுகளுடன் சகல பாடசாலைக ளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
|
0 Comments