Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஜே.வி.பி எதிர்ப்பு

தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஜே.வி.பி கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 
தேசிய நிறைவேற்றுப் பேரவை நேற்று கூடிய போது ஜே.வி.பி கட்சி இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
விருப்பத் தெரிவு முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் விகிதாசார முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
விகிதாசார முறைமையில் மாற்றம் செய்யப்படுவதனால் சிறு கட்சிகளின் இருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும்.
எனவே விகிதாசார முறைமை மாற்றத்தை ஜே.வி.பி கட்சி எதிர்க்கின்றது
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்தல் மற்றும் 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தல் ஆகியனவற்றுக்கு இணக்கம் காணப்பட்டது.
19ம் திருத்தச் சட்டம் எப்போது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான விசாரணைகள் கிரமமாக நடத்தப்பட வேண்டுமெனவும் இணக்கம் காணப்பட்டது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments