களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் ஓந்தாச்சிமடம் பிரதானவீதியின் வாகைமர சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.உயிரிழந்தவர் முனைத்தீவை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கமலசேகரன் என இனம் காணப்பட்டுள்ளது.
கல்லாறு-ஓந்தாச்சிமடம் பாலத்தில் வைத்து போக்குவரத்து பொலிசாரின் நிறுத்தல் சமிக்ஞையை மீறிய வான் வேகமாக வந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் வந்தவர் மீது மோதியதில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிசார் வானை அவ்விடத்தில் இருந்து அகற்ற முற்பட்ட வேளையில் பதட்ட நிலை உருவாகியது.வான் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்குள்ளாகியது.
இராணுவம்,விசேட அதிரடிப்படையினர் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.



0 Comments