மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.81 ரக துப்பாக்கி மற்றும் இரண்டு மெகசீன்கள் உட்பட ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் சுகாதார திணைக்களம் நிர்மாணிக்கவுள்ள கட்டிடமொன்றிற்காக அத்திவாரம் தோண்டிக் கொண்டிருந்தபோதே குறித்த துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் பாரிய நீர்க்குழாய் ஒன்றினுள் போட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments