அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இலங்கை- ஸ்காட்லாந்து அணிகள் மோதும் உலகக் கிண்ண 'ஏ' பிரிவு லீக் போட்டி இன்று நடக்கிறது.
இதில் டொஸ் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது, இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும், தில்ஷனும் களமிறங்கினர்.
தொடக்கத்திலிருந்து துடுப்பாட்டத்தில் திணறிய திரிமன்னே 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின் இணைந்த தில்ஷனும், சங்கக்காராவும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இதனால் அணியின் ஸ்கோர் வேகமாக முன்னேறியது.
34வது ஓவரில் 5வது பந்தில் தில்ஷன் சதமடிக்க, கடைசி பந்தில் சங்கக்காராவும் சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் உலகக் கிண்ண போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை அடித்தவர் என்ற சாதனையை சங்கக்காரா படைத்தார்.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் தில்ஷன் 104 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், சங்கக்காரா 124 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்கவே அடுத்து வந்த ஜெயவர்த்தனே(2) ஏமாற்றினார்.
மேத்யூஸ் மட்டும் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 50 ஓவருக்கு 363 ஓட்டங்கள் எடுத்தது.






0 Comments