Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

துறைமுக நகரத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்! - சீனாவுக்கு வாக்குறுதி

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை இன்று இலங்கை ஜனாதிபதி சந்தித்த போதே இதனை கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டம் சீனாவின் தலையீடு என்பதன் காரணமாக நிறுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
  
துறைமுக நகரம் தொடர்பில் இருக்கும் சில திட்ட காரணங்களின் அடிப்படையில் தற்காலிகமாக அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் குறித்த அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தித் திட்டம் தொடர்பான பிரச்சினையான நிலைமைகளுக்கு தீர்வு கண்ட பின்னர், அதனை முன்னெடுத்துச் செல்வதில் தடையிருக்காது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை சீனாவின் மூலோபாய பங்காளி என சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்ங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார். சீனா, இலங்கையை ராஜதந்திர ரீதியில் பிராந்தியத்தில் முக்கிய இடத்தில் வைத்துள்ளது எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில், இன்று நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்க்கும் இடையில் இன்று முற்பகல் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பிற்கு பின்னர் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சுகாதாரம், கல்வி, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமாக இந்த நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments