Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இரண்டு பயணிகளே வருகை! மூடப்படுகிறது மத்தள விமான நிலையம்

மத்தள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்திற்கான சகல பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைகளையும் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை, துணை தலைவர் சஞ்சீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தைப் பராமரிப்பதற்காக 250 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், கடந்த மாதம் இரண்டு பயணிகள் மட்டுமே விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாரியளவில் பணத்தை செலவிட்டு விமான நிலையத்தை பராமரிப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக நிலைமையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் 450 பேர் பணியாற்றி வருவதாகவும் இதில் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலத்தில் சரக்கு விமானங்கள் தரையிறங்குவதற்காக இவ் விமான நிலையம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments