Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் சாட்சியமளிக்க தயார்: வி.முரளிதரன்

போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை நடத்தப்படுமானால் அதில் சாட்சியமளிக்க தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே எல்.எல்.ஆர்.சி என்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் தாம் சாட்சியமளித்ததாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று புதிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அதன் முன் சாட்சியமளிக்க தாம் தயார். இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிக்கு தாம் தாமதமின்றி ஆதரவு வழங்கவுள்ளதாக முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விசாரணையை தாம் எப்போதும் ஆதரித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முரளிதரன், வெளியக விசாரணைகளையே எதிர்த்து வந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை இராணுவம் திட்டமிட்டு தமிழர்களை கொல்லவில்லை என்று முரளிதரன் நியாயப்படுத்தியுள்ளார். எனவே அது இனப்படுகொலை என்ற பெயரில் அழைக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
போர் முடிவடைந்துள்ள நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்றும் முரளிதரன் கோரியுள்ளார்.

Post a Comment

0 Comments