Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அற்ப சலுகைகளுக்கு ஆசைப்பட்டு சோரம் போய்விட்டது கூட்டமைப்பு மட்டு.மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை

பிச்­சைக்­காரன் தனது ஆறாத புண்ணை காண்­பித்து பிச்சை எடுப்­பது போல தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமி­ழர்­களை ஏமாற்றி மீண்டும் உரிமை, உணர்வு ரீதி­யாக பேசி எதிர்­கால தேர்­தல்­களில்  வாக்குக் கேட்க தமிழ் மக்­க­ளிடம் வரு­வார்கள். அவர்களுக்கு மக்கள் சரி­யான பாடம் புகட்ட வேண்டும் என  மட்­டக்­க­ளப்பு மாந­கர முன்னாள் பிரதி முதல்வர் ஆ.ஜோர்ஜ்­பிள்ளை தெரி­வித்­தார்.

இது­கு­றித்­து ­அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
பல உயிர் தியா­கங்­க­ளையும், இழப்­புக்­க­ளையும் சந்­தித்த தமிழ் இனத்தை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­கு­னிய வைத்­துள்­ளது.  இது­வரை காலமும் தமிழ் மக்கள் மத்­தியில் தமிழ்த் தேசியம்,  வட­கி­ழக்கு இணைப்பு என்ற கோசம் எழுப்­பி­ய­வர்கள் இன்று மாற்­றா­னிடம் மண்­டி­யிட்டு அமைச்சு பத­வி­களை பெற்றுள்ளனர்.
கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­திக்கு பூரண ஆத­ரவு தெரி­வித்து அவர் வெற்­றியும் பெற்­று­விட்டார் இன்று வரை எமது தமிழ்ச் சமூகம் எதிர்­நோக்கும் பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­முன்­வ­ர­வில்லை. இன்று பல நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்கள் புலிகள் என்ற சந்­தே­கத்தில் சிறை­வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் ஒரு சில­ரை­யேனும் விடு­விக்­கக்­கோரி ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எத­னையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுக்­க­வில்லை. வட­கி­ழக்கில் யுத்தம் கார­ண­மாக பல ஆயி­ரக்­க­ணக்­கான வித­வைகள் உள்­ளனர் இவர்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு வழி­ச­மைத்து கொடுக்­க­வில்லை.
இவற்­றை­யெல்லாம் மறந்து தன்­மானம் இழந்து எமது தமிழ்ச் சமூகத்தின் சுய கௌர­வத்தை கொச்­சைப்­ப­டுத்தி இன்று அற்ப சலு­கை­க­ளுக்கும் பத­விக்கும் ஆசைப்­பட்டு சோரம் போய் விட்­டார்கள் இதற்­கா­கவா எமது தமிழ்ச் சமூகம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளித்­தது.
மாகா­ண­சபை முறைமை தமிழ்ச் சமூ­கத்­திற்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அனைத்­தையும் இழந்து தவிக்கும் எமது சமூ­கத்­திற்கு மாகா­ண­சபை ஆட்­சியில் தலை­மையை கைப்­பற்றி முழு­மை­யான சேவை செய்­வதை விடுத்து கிழக்கு மாகா­ண­ச­பையில் அதிக தமிழ் பிர­தி­நி­தி­களை கொண்­டி­ருந்தும் அதிக தமிழ் மக்­களின் வாக்­கு­களை பெற்றும் இன்று சோரம் போய் பிச்சைப் பாத்­திரம் ஏந்தி அமைச்சு பத­வி­களை பெற்­றி­ருக்­கின்­றார்­கள்,  ஒரு காலத்தில் எமது உரி­மைகள் வெல்­லப்­ப­­டும்­வரை உள்­ளூ­ராட்சி தேர்­த­லையே புறக்­க­ணிப்போம் என்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு புலிகள் மறைந்த பின் தங்கள் போலி­யான முகமூடியை அகற்றி உண்­மை­யான சுய­ரூ­பத்தை வெளிக்­காட்டி விட்­டார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் எடுக்கும் முடி வில் தான் எதுவும் செய்ய முடி­யாது. என்று சொல்­வது யாரை ஏமாற்­று­வ­தற்கு?  இது தானா? தலை­மைத்­துவம்.  இன்று ஏனைய கட்­சி­க­ளுடன் அமைக்­கப்­பட்ட தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பின் தமிழரசுக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சமீ­பத்தில் மேடை­களில் எதை பேசு­கி­றார்கள் தாங்கள் மட்டும் தான் தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்க முடியும் ஏனைய கட்­சி­க­ளுக்கு முடி­யாது என்று தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால் இந்த மண்ணில் வாழ்­கின்ற ஒவ்­வொரு தமி­ழ­ருக்கும் உரி­மை­யுண்டு தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­மைப்­புக்கு கொள்கை இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
இன்று இலட்சியம் கொள்கை எல்லா வற்றையும் காற்றில் பறக்க விட்டு மானம் இழந்து மரியாதை இழந்து சுய கௌரவம் இழந்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் இவர்கள் இரட்டை வேடம் போடுவதை இனியும் தமிழ்ச் சமூகம் அனு மதியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments