மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்புத் தோகுதியில் அமைந்துள்ள ஒரு 1 AB பாடசாலையாக மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி விளங்குகின்றது. இப்பாடசாலையினை சிறந்த முறையில் நிர்வாகம் செய்கின்ற அனுபவம் மிக்க அதிபராக பொன் வன்னியசிங்கம் அதிபர் அவர்கள் திகழ்கின்றார். இப்பாடசாலையில் 36 கிராமங்களில் இருந்து மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். அதிபரின் சிறந்த முகாமைத்துவம், ஆசிரியர்களின் அர்பணிப்புள்ள சேவை என்பனவற்றுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையில் பலதரப்பட்ட வகையைச் சேர்ந்த, பல்வேறு தரத்திலுள்ள மாணவர்களும் கல்வியைத் தொடர்கின்றனர். ஏனைய நகரப் பாடசாலைகளோடு ஒப்பிடும் போது இங்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது பாரிய சவால் மிக்கதாகும். அத்தனை சவால்களையும் வெற்றி கொண்டு அதிபர்கள், ஆசிரியர்கள் சிறந்த சேவையை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். இப்பாடசாலையில் க.பொ.த. சாதாரண தரம் வரையில் கல்வி கற்று சிறந்த பெறுபெறுகளை பெற்றக்கொள்கின்ற மாணவர்கள் நகரப் பாடசாலைகளுக்கு செல்கின்றமை இப்பாடசாலையில் உள்ள பாரிய பிரச்சினையாகும். இருந்தாலும் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் இப்பாடசாலையில் உயர்தரத்தில் விஞ்ஞான, கணித பிரிவுகளில் கல்வி கற்று சாதனைகளையும் படைக்கின்றமை இப்பாடசாலைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக மனோகரன் நிலோஜன் எனும் மாணவன் 2014 ல் உயர் தரத்தில் விஞ்ஞான துறையில் கல்வி கற்று மாவட்டத்தில் 14வது நிலையில் மருத்துவப் பிரிவிற்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கதாகும். 11.03.2015 இன்றைய தினம் பாடசாலைச் சமூகத்தை நன்றியுணர்வோடு கௌரவிக்கும் முகமாக மதியபோசன விருந்துபசாரத்தினை மாணவனும், பெற்றோரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வானது வித்தியாலய அதிபர் பொன். வன்னியசிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது மாணவனின் பல்வேறு வகையான திறமைச் செயல்கள், ஒழுங்கம் என்பன நினைவுகூரப்பட்டு அதிபர், பிரதியதிபர், ஆசிரியர்களால் வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது. இறுதியில் மாணவனுக்கான பரிசாக அதிபர் அவர்கள் அணிகலன் ஒன்றினை அணிவிப்பதைப் படங்களில் காணலாம்.
0 Comments