Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஓட்டமாவடி விபத்தில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை மாலை இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பொத்துவில் பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த வான் ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் மீது மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்ததவர் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்திளசாலைக்கு கொண்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தற்போது மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணைகளுக்கு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் ஓட்டமாவடி புகையிரத வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அலியார் முஹம்மது புகாரி என்பவரே மரணமடைந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதைச் சேர்ந்த வானின் சாரதியை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்துத் தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments