தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், இந்தியாவின் கோஹ்லியை விட இலங்கையின் சங்கக்காரா மிக ஆபத்தான பேட்ஸ்மேன் என தெரிவித்துள்ளார் முத்தையா முரளிதரன்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் சதமடித்து, புதிய சாதனை படைத்தார்.
இதுகுறித்து முத்தையா முரளிதரன் கூறியதாவது, அவுஸ்திரேலியாவுடன் இலங்கை தோற்றிருந்தாலும் அதன் பாசிட்டிவ் எண்ணம் கவர்வதாக உள்ளது.
பந்துவீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தாலும், துடுப்பாட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
தற்போது உலகின் நம்பர் ஒன் துடுப்பாட்ட வீரர் என்றால் அது குமார் சங்கக்காரா தான்.
நீங்கள் வீராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் பற்றி என்னதான் பெருமையாக பேசினாலும் தற்போதைய டாப் சங்கக்காராதான்.
மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும், ஒரு வீரரை பார்த்து பிற அணிகள் அச்சப்படுகின்றன என்றால், அது சங்ககாராவை பார்த்துதான்.
இந்த உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறும் முடிவில் இருப்பதால் தன்னுடைய முழுத் திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார் என தெரிவித்துள்ளார்
0 Comments