Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானிய சிறுமிகள் பாலியல் தொழில்களுக்காக இலங்கைக்கு அனுப்பப்படுகின்றனர்?

பாகிஸ்தானின் சிறுமியர் பாலியல் தொழில்களுக்காக இலங்கைக்கு அனுப்பப்படுகின்றரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
அண்மையில், கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட யுவதிகள் விபச்சார தொழில்களில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த வேளையில், குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த யுவதிகள் லாகூரில் உள்ள ஆட்கடத்தல்காரர்களிடம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் படியே இலங்கைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
ஆசிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான சேவையை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த உடன்படிக்கை என்று கூறப்படுகிறது.
இதேவேளை குறித்த ஆட்கடத்தல்காரர்கள் இலங்கையில் தற்போது தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments