Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சகல மருத்துவ பரிசோதனைகளையும் இலவசமாக அரச வைத்தியசாலைகளில் வழங்க நடவடிக்கை!

சகல மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துப் பொருட்களையும் இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய ஒளடத கொள்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெகு விரைவில் இலவசமாகவே சகல மருத்துவ பரிசோதனைகளையும் நோயாளிகள் அரசாங்க வைத்தியசாலைகளில் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
இந்த திட்டத்தை முன்னெடுக்க மாகாண முதலமைச்சர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகளின் கீழ் இயங்கி வரும் வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான தீர்வுகள் வழங்கப்படும்.
அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு நான் எப்போதும் விரும்பிய ஒருவன்.
சுகாதார அமைச்சரின் அதிகாரங்களில் சிலவற்றை மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்குவதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments