Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழர்களைஎப்படியாவது மாகாண அமைச்சரவையில் இணைக்க உச்சக்கட்ட தியாகத்தை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது

கிழக்கு மாகாண சபையில் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக மு.கா. உச்சக்கட்ட பொறுமையை கையாண்டது. தேசிய நீரோட்டத்தில் தமிழர்களை இணைக்க வேண்டிய கட்டம் வந்துள்ளதால் அவர்களை எப்படியாவது மாகாண அமைச்சரவையில் இணைக்க உச்சக்கட்ட தியாகத்தை முஸ்லிம் சமூகம் செய்துள்ளதாக ஸ்ரீல.மு.காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் நிந்தவூரில்  இடம்பெற்ற “வாழ்வில் ஒளி” நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில்,
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து கிழக்கு முதலமைச்சரை ஸ்ரீல.மு.கா.விற்கு வழங்குவதாக தெரிவித்தது. ஆனால், அன்று இருந்த சூழ்நிலை காரணமாக அந்த அழைப்பிலிருந்து நாம் பின்வாங்கியதால் கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய துரோகம் செய்துவிட்டதாக எம்மீது குற்றம் சுமத்தினர்.
ஆனால், அன்று இருந்த நிலைமையில் மு.கா.விற்கு 07 உறுப்பினர்களும், த.தே.கூ.விற்கு 11 உறுப்பினர்களும் இருந்தது. இருந்தாலும் 18 ஆசனங்களை வைத்துக்கொண்டு அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடியாது.
அதனால் அந்த நேரத்தில் மூன்றாவது அரசியல் சக்தியுடன் பேசி ஆட்சியமைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இருந்த போதும் அன்று 19வது நபராக ஆரிப் சம்சுதீன் எம்முடன் இணைந்திருந்தால் கிழக்கு மாகாண சபையில் அவர் அமைச்சராக இருந்திருப்பார். ஆனால், இன்று அவர் எம்முடன் இணைந்ததன் மூலம் நாம் ஆட்சியமைக்க இருந்த அறுதிப் பெரும்பான்மை குறை நீங்கியுள்ளது.
இதேவேளை அன்று எமக்கு வழங்கப்படவிருந்த கிழக்கு முதலமைச்சரை இன்று த.தே.கூ. தருவதற்கு தயாராக இருக்கவில்லை. எனவே, இந்த இடத்திலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் 19வது ஆசனம் மிக முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக மு.கா. உச்சக்கட்ட பொறுமையை கையாண்டது. தேசிய நீரோட்டத்தில் தமிழர்களை இணைக்க வேண்டிய கட்டம் வந்துள்ளதால் அவர்களை எப்படியாவது மாகாண அமைச்சரவையில் இணைக்க உச்சக்கட்ட தியாகத்தை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது.
கிழக்கு முதலமைச்சர் விடயத்தில் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி அதற்குள் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்தோம்.
அரசாங்கத்தில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டுவர திட்டம் தீட்டப்படுகின்றது. 18வது திருத்த சட்டத்தினை இல்லாமல் செய்வது, சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் உயிர் பெறச் செய்வது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கட்சிமாறும் கலாசாரத்தினை இல்லாமல் செய்வது, 13வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது போன்ற இன்னும் பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments