மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உக்டா நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தி வரும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு சேமிப்பு திட்டத்தினை மாணவர்களிடையே கொண்டு செல்வது தொடர்பாகவும் இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் விளக்கமளிக்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி கிளையின் ஏற்பாட்டில் இன்று(24) உக்டா சமூகவள நிலையத்தில் இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் யு.ஆ.வலித்தூர் 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி கிளை கடந்த வருடம்; சேமிப்புத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தையும் இலங்கையில் மூன்றாம் இடத்தினையும் பெற்றிருந்தமை பாராட்டத்தக்க விடயமும் ஆகும். என்றார்.
இதன் போது தா.வேதநாயம் அவர்களின் நிதியுதவியுடன் முனைக்காடு கிராமத்தில் இல்லங்கள் தோறும் சேமிப்புத்திட்டம் எனும் தொனிப்பொருளில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வங்கிப் புத்தகத்தை ஆரம்பித்து வழங்கும் திட்டத்தின் கீழ் 05நபர்களுக்குரிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.
வங்கியின் முகாமையாளர் மா.மோகனதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் A.M.வலித்தூர், பிரதி பிராந்திய முகாமையாளர் A.ஜெயசித், அதிபர் பொ.நேசதுரை, உக்டா நிறுவன செயலாளர் சி.கங்கதாரன், வங்கி உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்




0 Comments