மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஊழல் மற்றும் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தும் விடயத்தில் புதிய அரசாங்கம் தீவிர ஆர்வம் காட்டாததன் காரணமாக மக்க்ள மத்தியில் சிறிசேன அரசாங்கம் குறித்த நம்பிக்கைகள் குறைவடையத் தொடங்கியுள்ளது கருத்துக்கணிப்பின் மூலமாக புலனாகியுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கு சற்று முன்னதாகவும் பின்னர் கடந்த வாரமளவிலும் இந்த கருத்துக்கணிப்புகளை பிசினஸ் டைம்ஸ் மற்றும் புரொபிசனல் போல்ஸ்டர் நிறுவனம் ஆகியவை இணைந்து முன்னெடுத்துள்ளன. குறிப்பிட்ட கருத்துக்கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? கருத்துச்சுதந்திரம் காணப்படுகின்றதா?சட்டத்தின் ஆட்சி காணப்படுகின்றதா? அதிகார துஸ்பிரயோகம் குறைவடைந்துள்ளதா போன்ற கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டுள்ளன.
0 Comments