Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சேகு இஸ்மாயில் அப்துல் ரஹீமை காணவில்லை!


அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சேகு இஸ்மாயில் அப்துல் ரஹீம் (42 வயது) என்பவர் நேற்று காலையிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் மனநல சிகிச்சை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்படி அப்துல் ரஹீம் என்பவர் நேற்றைய தினம் அட்டாளைச்சேனையிலிருந்து நபரொருவருடன் பொத்துவில் தகராம்பளை வயல் பகுதிக்குச் சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகிறது.

இவ் விடயம் தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்கள் தெரிவிக்கையில்....

அப்துல் ரஹீம் என்பவர் சில காலமாக மனநல சிசிக்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்டவரை, அட்டாளைச்சேனையிலிருந்து பொத்துவில் தகராம்பளை வயல் பகுதிக்கு வேலையொன்றின் நிமித்தம் நபரொருவர் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, அப்துல் ரஹீம் என்பவரை தேனீர் கடையொன்றில் இருக்குமாறு கூறிவிட்டு, அவரை அழைத்து வந்தவர் – வயல் பகுதிக்குச் சென்றிருந்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது, அப்துல் ரஹீம் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இவ் விடயம் தொடர்பில் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கைகளில் – அவரின் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தகராம்பளை காட்டுப் பகுதியில் அப்பிரதேச விவசாயிகளின் உதவியுடன் – தேடும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாக, காணாமல் போனவரின் உறவினரொருவர் தெரிவித்தார்.

பொத்துவில் தகராம்பளை வயல் மற்றும் அங்குள்ள காட்டுப் பகுதிகளில் யானைகள் மற்றும் கொடிய மிருகங்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன மேற்படி நபரின் புகைப்படம், இச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், காணாமல் போனவர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் – அவரின் உறவினரான அஜ்மல் என்பவரை 0773 574 602 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments