முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு தியான நிலையத்தின் செய்தியை தாமதித்து ஒளிபரப்புமாறு சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, சுவர்ணவாஹினி செய்தியாளர்களுடன் இணைந்து பெப்ரவரி 3ஆம் திகதியன்று குறித்த சொகுசு தியான நிலையத்தை கண்டுபிடித்தனர்.
எனினும் பெப்ரவரி 6ஆம் திகதியே அதனை ஒளிபரப்ப அனுமதி கிடைத்தது.
நிறுவனத்தின் தலைமையிடம் இருந்தே தாமதத்துக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடவத்தை, இம்புல்கொட என்ற இடத்தில் அமைந்திருந்த இந்த தியான நிலையம், 8 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 1000 மில்லியன் ரூபாய்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய குளியலறை பொருத்திகள் இதில் காணப்பட்டன. அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த இடம், மன்னன் வலகம்பா வசித்த இடம் என்று கருதப்படுகிறது.
இதேவேளை இந்த தியான நிலையத்தை சுற்றி சுமார் 60 படையினர் கடந்த ஜனவரி 8ஆம் திகதி வரை பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

0 Comments