போரின் இறுதிக்கட்டத்தில், விஸ்வமடுவுக்கு அருகில் 30 ஆயிரம் தொடக்கம், 35 ஆயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
“அந்த சடலங்களுக்கு பிரேத பரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம், இரண்டு வாரங்களுக்கு முன்னரே எனக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது
போரின் இறுதியில் நடந்தது இனப்படுகொலையே என்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானதே
போரின் இறுதி எட்டு மாத காலத்தில் 1,46,679 மக்களுக்கு என்ன ஆனது என்ற கணக்கு கொடுக்க முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் எங்கே என்று இன்று வரை தெரியவில்லை
இலங்கையில் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் போருக்குப் பிறகும் தொடர்கிறது.
போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் நடத்தப் போவதாக கூறும் புதிய உள்நாட்டு விசாரணையால் எந்த பயனும் ஏற்படாது
ஐ.நா மேற்பார்வையிலான அனைத்துலக விசாரணையே உண்மைகளை வெளியில் கொண்டுவர உதவும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments