Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மருத்துவ வரலாற்றில் சாதனை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை 26 மணித்தியால போராட்டத்தின் பின்னர் வைத்தியர் இரண்டாக பிரித்துள்ளனர்.


ஒட்டிப் பிறந்த குழந்தைகளை 26 மணித்தியால போராட்டத்தின் பின்னர் வைத்தியர் இரண்டாக பிரித்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எலிசீ என்ற பெண்மணிக்கு ஒட்டிய நிலையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.
நடல்யே ஹோப், அடிலைன் மாட்ட என்று பெயரிடப்பட்ட இந்த இரட்டைப் பெண் குழந்தைகள், நுரையீரல், கல்லீரல், குடல், பெருங்குடல், இடுப்பு மற்றும் இதயம் உட்பட பல உறுப்புகளும் ஒட்டிய நிலையில் பிறந்தன.
டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26 மணி நேர தீவிர அறுவை சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் மருத்துவர்கள் பிரித்துள்ளனர்.



சுமார் 26 மணி நேரங்களாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் இரண்டு குழந்தைகளின் மார்பு மற்றும் வயிற்றை பிரித்து உள்ளுறுப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.



அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அந்த குழந்தைகளின் தாயார் எலிஸ் கூறியதாவது, எனது குழந்தைகளை காப்பாற்ற மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும், ஈடுபாடும் நெகிழ வைத்துள்ளது.



எனது குழந்தைகளுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்த மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற பிரார்த்தனை செய்த அத்தனை நபர்களுக்கும், கண்ணீரால் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என உருக்கமுடன் கூறியுள்ளார்.





இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவர் டாரில் கேஸ் (Darrell Cass) கூறுகையில்,

இதுபோன்ற சிக்கலான உள்ளுறுப்புகளுடன் கூடிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியது மருத்துவ வரலாற்றில் இதுவே முதல் முறை.

அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் மாதக்கணக்கில் குழந்தைகளின் உள்ளுறுப்புகள் போல் 3D வடிவில் மாதிரி உறுப்புகளை செய்து அவற்றை எவ்வாறு பிரித்து எடுப்பது உள்ளிட்ட பல பயிற்சிகளை எடுத்ததால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.



தற்போது குழந்தைகள் இருவரும் நலமாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு மாதங்கள் மருத்துவமனையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
























































Post a Comment

0 Comments