பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை முஸ்லிம் பிரிவு அமைப்பாளர் எஸ்.எல்.எஸ். முஹீஸ் ஏற்பாட்டில் கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று (04) இடம்பெற்ற பெண்களுக்கான கருத்தரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகேயின் கல்முனை இணைப்பாளர் சட்டத்தரணி றஸாக், மற்றும் தனிப்பட்ட இணைப்பாளர் ஏ.எச். சிறாஜ் அஹமட் உட்பட்ட பிரதேசவாசிகளும், பெருந்திரளான பெண்களும் கலந்துகொண்டனர்.
இன்று சாய்ந்தமருதில் அஸ்வான் மௌலானா, ஸிராஜ் ஆகியோரின் இல்லங்களிலும் பெண்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments