Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முதலாம் தவணைக்காக மீண்டும் பாடசாலைகள் இன்று ஆரம்பம்


இவ்வருடம் (2015) முதலாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் இன்றுஆரம்பமாகவுள்ளன. 


கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் 68 பாடசாலைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ள 27 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அணைத்தும் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 



இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை 83 பாடசாலைகளில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக 68 பாடசாலைகளில் மட்டுமே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 



குறித்த பாடசாலைகள் முதலாம் தவணைக்காக எதிர்வரும் 12ம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 



இதேவேளை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் எதிர்வரும் 7,8,9ம் திகதிகளில் விடுமுறை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 



மேலும் பாப்பரசர் வருகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 46 பாடசாலைகளுக்கு 11 தொடக்கம் 15ம் திகதிவரை விடுமுறை அளிக்கப்படவுள்ளது. 

Post a Comment

0 Comments