மஹிந்தவின் மகனின் CSN தொலைக்காட்சி சேவையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைக்காட்சி தனதாக்கிக் கொண்டிருந்த கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான அதிகாரத்தை தேசிய ரூபவாஹினிக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ரூபவாஹினியின் புதிய தலைவர் பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் கிரிக்கெட் உரிமையை CSN தொலைக்காட்சி பெற்றுக் கொண்டதால் ரூபவாஹினிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்சவினால் கால்ட்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் (CSN) தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments