மட்டு. மாவட்டத்தில் ஊழலில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அலுவலர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அமீர் அலி, நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த பிரதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதற்கினங்க மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களும், அரச அலுவலர்களும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கும் ஊழல்களை சட்டத்துக்கு முன்கொண்டு வந்து அனைத்தையும் உடைத்தெரிவதே எனது நூறு நாள் வேலைத்திட்டத்தில் முதற்திட்டமாகும்.
கல்குடா பிரதேசம் உட்பட முழு மட்டகளப்பு மாவட்ட மக்களின் கஸ்டங்களில் பங்கு கொள்ளும் அரசியல்வாதியாக இருக்க விரும்புவதோடு விசேடமாக கல்குடா பிரதேசத்தில் பாரிய பிரச்சனையாக இருந்து வருகின்ற தூய குடிநீர் பிரச்சினை மற்றும் பிரதேச சபை ரீதியாக எடுக்க இருக்கின்ற பிரச்சனைகள் என்பவற்றை எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.
கடந்த காலங்களில் இந்த பிரச்சனைகளுக்கு தன்னால் முடியுமான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சில தடங்கள் ஏற்பட்டதன் காரனமாக எனது முயற்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டதினால் மாவட்டத்தில் இருக்கின்ற தமிழரசுக் கட்சியின் இனக்கப்பாட்டுடன் இந்த முயற்ச்சியினை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன்.
கடந்த காலங்களின் தனித்து நிறைவேற்ற வேண்டும் என நினைத்த விடயங்களை தற்போது ஏனைய அரசியல் கட்சிகளின் இனக்கப்பாட்டுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளேன். இந்த அரசாங்கம் ஒரு நல்லாட்ச்சியினை மையப்படுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசாங்கமாக இருப்பதினால் தானும் குறிப்பிட்ட பிரதேசத்தில் அரசியலும் நல்லாட்ச்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவில் உள்ளேன்.
மாவட்டத்தில் இடம்பெறுக்கின்ற அபிவிருத்திகள், உரிமை சாந்த விடயங்கள் என்பவறை முன்னெடுக்கின்றபொழுது அப்பிரதேசத்தில் இருக்கின்ற தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களோடும், மாகான சபை உறுப்பினர்களோடும் கலந்தாலோசித்து நல்லதொரு முடிவுக்கு வருவதனையே எதிர்காலத்தில் முன்னிலைபடுத்தவுள்ளேன்.
தமிழர்கள், முஸ்லிம்கள் என்று பிரிந்து செயல்படும் அரசியல் கலாசாரத்தை தான் வெறுப்பதாகவும், தனது மிகுதி அரசியல் வாழ்க்கை ஒற்றுமைப்படுத்தப்பட்ட அரசியல் கலாசாரத்தைக் கொண்டதான அரசியல் முன்னெடுப்புக்களை விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்க உள்ளேன்” என்றார்.
0 Comments