Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரச தொலைக்காட்சியில் கூடத்திற்குள் புகுந்தார் தேர்தல் ஆணையாளர்…

அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்புச்செய்யப்பட்ட போலிப் பிரச்சாரத்தை உடனடியாக திருத்திக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேரில் சென்று உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சித்தாவியதாகவும் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்தப் போலிப் பிரச்சாரத்தை உடனடியாக திருத்தி சரியான தகவலை ஒளிபரப்புமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு நேரில் விஜயம் செய்து கோரியுள்ளார்.
சஜித் பிரேமதாச தங்காலையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் கார்ல்டன் இல்லத்திற்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார் என ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த செய்தி முற்று முழுதாகவே அடிப்படையற்ற ஓர் போலியான தகவல் என சஜித் பிரேமதாச, தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். செய்தியை திருத்தி மீள ஒளிபரப்புச் செய்வதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தேர்தல் ஆணையாளருக்கு உறுதியளித்துள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Elasen

Post a Comment

0 Comments