Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாவலப்பிட்டிய பிரதேசத்தில் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு

கண்டி மாவட்டத்தில் உள்ள நாவலப்பிட்டிய மற்றும் ஹேவா ஹெட ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு விஷேட அதிரடி படை பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சி மாவட்ட பாராளுமன்ற குழுத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கியுள்ள வேண்டுகோளை அடுத்து தேர்தல் ஆணையாளர் இந்த உத்தரவை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியுள்ளார்.
இதனால் இப்பிரதேச மக்கள் அச்சமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியும் என  லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments