இன்றைய அரசியல் நிலமைகளில் வட கிழக்கு மக்களின் எதிர்காலம் 08.01.2015 அன்று தீர்மானிக்க படஇருக்கின்றது இந்த நிலமைகளில் தழிழ்மக்களுக்கு என்று எந்த அடையாளம் இருக்கும் என்று கேட்டால் அது என்னவென்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் நாம் உள்ளோம் இருந்தும் எமது தலைவர்கள் எம்மை காக்கின்றார்களா ? அல்லது அழிக்கின்றார்களா ? என்று புரியாத நிலையில் நாம் திண்டாடிக்கொன்டு இருக்கின்றோம்.
இதுவரை நாம் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று இருந்தோம் இன்று யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கின்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் இருப்பினும் இங்கு போட்டிஇடும் இரு தலைவர்களும் சிங்கள தலைவர்க
ளே உண்மையிலே மைத்திரிபால சிரிசேன அவர்கள் மகிந்த ஐனாதிபதி உடன் இருந்து சேவை புரிந்தவர் ஆனால் இன்று அவரை பிரிந்து எதிராக நிற்கின்றார்
தழிழர்கள் கூறுவார்கள் யாரை நம்பினாலும் நம்பிக்கை துரோகியை நம்ப கூடாது என்று அப்படியாயின் நாம் இன்று ஓர் நம்பிக்கை துரோகியை ஆதரிப்பதா? அல்லது ஒரு உண்மையான நாட்டுப் பற்றாளனை ஆதரிப்பதா ? ஆக நாம் அனைவரும் ஓன்றுபட வேண்டும் அரசியல் வாதிகள் என்று கூறப்படுபவர்கள் என்றுமே ஏழைகளாவது இல்லை அவர்கள் தங்களுடைய குடும்பம் குட்டிகள் நன்றாக இருக்கின்றனவா என்றுதான் யோசிக்கின்றனர்
அதிலும் தழிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இதனை சொல்லதேவை இல்லை இன்று நடக்க போவது ஐனாதிபதி தேர்தல் அல்ல தழிழ் மக்களுக்கான ஓர் தனித்துவம் ஆகும் மைத்திரி அவர்கள் ஏன் முஸ்லீம் மக்களுக்கு கரையோரத்தில் மாவட்டம் வழங்கவேண்டும் அப்படி வழங்கினால் கிழக்கு மாகாண தழிழ்மக்களுக்கு என்று எங்கே தனியான மாவட்டம் உள்ளது ? மேலும் பிற்பட்ட காலப்பகுதியில் தழிழர்களுக்கு என்று இருந்த தடமும் கூட இலங்கை வரைபடத்தில் இருந்து இல்லாமல் போய்விடும்
பின்பு நாளைய இளம் தழிழ் சந்ததியினர் தனக்கு என்று சொந்த பிரதேசம் எதுவும் இன்றி நடு வீதியில் கிடப்பார்கள் அந்த நிலைமைக்கு நாம் காரணமாகி விட கூடாது.
பாருங்கள் இன்று தழிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் எவளவு நெருக்கமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றார்கள் அதனை மைத்திரி அவர்களின் பிரசாரத்திலே குழப்பத்தை உண்டுபன்னி உள்ளார் நான் எதைபற்றி கூறுகின்றேன் என்றால் ஆட்சிக்கு வரும் முன்னே நாட்டை கூறு போடநினைக்கின்றார் மைத்திரி பால அவர்கள் ஆக நாம் தற்போது ஓற்றுமையாக வாழ்கின்றோம் இதற்கிடையில் யார் வந்து பேசினாலும் நாம் நம்பி விடமுடியாது காதால் கேட்பதைவிட கண்னால் கான்பதுதான் உண்மை என்பார்கள் அதுபோன்று கண்னால் கண்ட காட்சிகளை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்
ஆக நாம் முதலில் எமது பிரச்சனையை தீர்க்க வேண்டும் அதன்பிற்பாடே மற்றவர்களின் பிரச்சனையை பார்க்கவேண்டும் உண்மையில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அரிசி ஆலை மற்றும் மக்களின் பல அடிப்படைத்தேவைகளை முதலாளியான மைத்திரி அவர்கள் மக்களின் நிலைமைக்கு ஏற்றவாரு விலைவாசிகளை குறைத்து இருக்க வேண்டும்
ஆனால் அவர் அப்படி குறைக்கவில்லை மக்களின் நலனை கருத்தில் எடுக்க வில்லை எனவே அப்படிப்பட்ட ஒருவரை நாம் எப்படி ஒரு ஐனாதிபதியாக தெரிவுசெய்ய முடியும்
எனவே வடகிழக்கு தழிழ் மக்கள் மாத்திரமல்ல அனைத்து இலங்கை மக்களும் இந்தநிலமையை கருத்தில் கொண்டு வருகின்ற ஐனாதிபதி தேர்தலில் நாம் பதிலடிகொடுக்க வேண்டும்.
0 Comments