Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மகிந்த அலரி மாளிகையில் வளர்த்த நாய்களுக்கு குளிரூட்டப்பட்ட ஆடம்பர அறை:

அலரி மாளிகையில் செல்லப் பிராணிகளாக விலை மதிப்பான 43 நாய்கள் வளர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 இந்த நாய்கள் பராமரிக்கப்பட்ட அறை குளிரூட்டப்பட்டு, ஆடம்பரமாக அறை அலங்கரிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இதனை தவிர பெறுமதியான 23 அரிய வகை பறவைகளும் ஒரு குதிரையும் இரண்டு போனிக்குதிரைகளும்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருக்காக கோடிக்கணக்கில் பொது நிதி செலவு செய்யப்பட்ட விதம் பற்றி தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி வாகனங்களை பராமரிப்பதற்காக மாத்திரம் கடந்த வருடம் 250 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு முன்னர் இவ்விதமான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான பேர்டினட் மார்கோஸ் குடும்பத்தினர் என்பது இங்கு நினைவுக்கூறத்தக்கது

Post a Comment

0 Comments