Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாக்குப்பெட்டி ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து, 4 பேர் படுகாயம்


வாக்கெடுப்பு நிலையத்தை நோக்கி வாக்குப் பெட்டிகள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலிய, காமினி வித்தியாலத்திலிருந்து கினிகத்ஹேன மினுவன்தெனிய வரை வாக்குப் பெட்டி எடுத்துச் செல்லும் ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் ஜீப்பில் இருந்த வாக்கெடுப்பு நிலைய சிரேஷ்ட அதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட  தேர்தல் கடமையில் இருந்த இரு ஊழியர்கள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களின் நிலைமை மோஷமாக உள்ளதனால் இவ்வாக்கெடுப்பு நிலையத்துக்கு வேறு புதிய அதிகாரிகளை நியமிக்க நுவரெலிய மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிதுல்கலயிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.  
Accident-RR-www.nethfm.com-04

Accident-RR-www.nethfm.com-03

Accident-RR-www.nethfm.com-02

Post a Comment

0 Comments