Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விபசாரம் - இந்திய பெண்களை கடத்த முயற்சித்த வங்காள தேச பெண்கள் கைது!

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த பெண்களை விபசாரத்துக்காக மும்பைக்கு கடத்த முயன்றதாக வங்காள தேசத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பர்த்வானில் இருந்து இந்த பெண்களை ரெயில் மூலம் நேற்றிரவு மும்பைக்கு கடத்த முயன்றபோது சந்தேகத்தின் பேரில் ரெயில் நிலையத்தில் இவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் கடத்தப்பட்ட பெண்களை மீட்டனர்.
  
பர்த்வான் நகரில் உள்ள மித்ரா லேன் பகுதியில் இதற்கென வாடகைக்கு வீடு பிடித்து தங்கியிருந்த வங்காள தேசத்தை சேர்ந்த பெண்களான தஸ்லிமா பேகம், சகானா பீவி, உர்மி பீவி மற்றும் இவர்களுக்கு பல வகைகளிலும் உடந்தையாக இருந்த உள்ளூர்வாசிகள் பன்ஷிதர் சாவ், இவரது மகனான சர்டனானி சாவ் ஆகியோரையும் கைது செய்த போலீசார், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். பிடிபட்ட தஸ்லிமாவிடம் இருந்து வங்காள தேசத்தின் பாஸ்போர்ட், வருமான வரி அடையாள அட்டையான பேன் கார்ட் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிப்பது போன்ற போலியானதொரு இந்திய வாக்காளர் அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments