ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/திகோ/ ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் 2014ல் புலமைப் பரிசில் பரீட்சையில் 06 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் பரீட்சைக்குத் தோற்றிய 17 மாணவர்களில் 12 மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர் எனவும் இவ்வித்தியாலயத்தின் வரலாற்றில் சிறந்த பெறுபேறாகும் எனவும் வித்தியாலய அதிபர் திரு.ஆ.ளு.குரூஸ் உறுதிசெய்துள்ளார்.

அத்துடன் இம் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 28.11.2014 வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் அதிபர் திரு.ஆ.ளு.குரூஸ் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகபணசபை உறுப்பினர் திரு.ஆ.இராஜேஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக பொத்துவில் தமிழ் பிரிவுக் கோட்டக்கல்விப். பணிப்பாளர் திரு. ஏ. ஜயந்தன் அவர்களும் முன்னாள் அதிபர்களான திரு. பு.வினாயகமூர்த்தி, திரு. N. உதயகுமார் ஆகியோரும் பெற்றோர், நலன்விரும்பிகள் மாணவர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் போது கற்பித்த ஆசிரியர் திரு. விநாயகமூர்த்தி உதயகுமார் அவர்கள் கிழக்கு மாகபணசபை உறுப்பினர் திரு. ஆ இராஜேஸ்வரன் அவர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். (மாவட்ட வெட்டுப்புள்ளி 150)



சான்றிதழ் பெற்ற 12 மாணவர்கள்
1. சுரேந்திரன் அனுஷh 72 புள்ளிகள்
2. சிவகுமார் தனுஷ; 96 புள்ளிகள்
3. சொக்கலிங்கம் றஞ்ஜித் 102 புள்ளிகள்
4. மகேந்திரன் மிதுர்சிக்கா 110 புள்ளிகள்
5. குணபாலன் விருர்ஷன் 114 புள்ளிகள்
6. தியாகராஜா தியானா 139 புள்ளிகள்
சித்தியடைந்த 06 மாணவர்கள்
7. சுதாகரன் அபிலாஷ; 150 புள்ளிகள்
8. தர்மலிங்கம் ஜினோஜன் 152 புள்ளிகள்
9. அருள்வாணன் அஷனா 153 புள்ளிகள்
10. நிறஞ்சன் திலக்ஷன் 156 புள்ளிகள்
11. கணேசன் விதுர்ஷ;டிக்கா 163 புள்ளிகள்
12. மகேந்திரன் அக்ஷpதன் 167 புள்ளிகள்
0 Comments