Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மலேசியாவில் விபசாரம்: இலங்கை பெண்கள் அறுவர் கைது!


மலேசியாவில் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை பெண்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மலேசியாவில் ஜொஹோர் பொலிஸார் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரையிலும் 10ஆயிரத்து 300 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர். 

அவற்றின் போது மலேசியாவில் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண்கள் 2,986 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் அறுவர் இலங்கையர் ஆவர். மலேசிய பெண்கள் 102 பேரும் சீனப்பெண்கள் 627 பேரும் வியட்னாம் பெண்கள் 1,341 பேரும் தாய்லாந்து பெண்கள் 555 பேரும் இந்தோனேசிய பெண்கள் 229 பேரும் கம்போடியா, சிங்கபூர் மற்றும் வெனிசுலா நாடுகளைச்சேர்ந்த தலா ஒவ்வொரு பெண்கள் மற்றும் இந்தியப் பெண்களில் 29 பேரும் அடங்குவதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments