Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை?

காத்தான்குடியில் இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பளாரும் பிரதியமைச்சருமான எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டமை தொடர்பில் தற்போது பல்வேறு வாதப் பிரிதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தக் கட்சியின் மேலும் இரு முக்கியஸ்தர்களான கட்சியின் தவிசாளரும் தேசியப் பட்டியல் எம்பியுமான அமீர் அலி மற்றும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் சுபைர் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டமையானது கட்சி மட்டத்திலும் ஆதரவாளர்களிடையேயும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. பிரதியமைச்சர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்படலாமென்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை சற்று நேரத்துக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
”எனது கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தன்னிடம் இது தொடர்பில் எதனையும் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளக் கூடாது என அவர் எந்த வேண்டுகோளையும் எனக்கு விடுவிக்கவில்லை.
நாங்கள் இன்னும் அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனுமே உள்ளோம். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதர வழங்குவது என்பது குறித்தும் எமது கட்சி தீர்மானிக்கவில்லை. எனவே, நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன தப்பு உள்ளது?
மேலும், எமது கட்சியைச் சேர்ந்தவர்களான அமீர் அலி மற்றும் சுபைர் ஆகியோர் கொழும்பில் தங்கியிருப்பதனால் அவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமீர் அலியை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது, கட்சி யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்காத வரை நான் எவ்வாறு அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமென கேள்வி எழுப்பினார்.
அதே கட்சியின் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளரான சுபைரை பலமுறை தொடர்பு கொண்ட போதும் இவ்வாறே பதில் கிடத்தது.

Post a Comment

0 Comments