Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மகனைக் கொன்று கழிவறைக்குள் போட்ட தந்தை கைது.


பலாங்கொடை - ஹய்வத்தை பிரதேசத்தில் பொல்லால் தாக்கி தனது மகனைக் கொலை செய்த 54 வயதான தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கடந்த மாதம் 27ம் திகதி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. 

இந்தநிலையில் சந்தேகநபரின் மனைவி கடந்த 18ம் திகதி பலாங்கொடை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதன்படி நேற்றையதினம் வீட்டில் இருந்த கழிவறையில் இருந்து 25 வயதான இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மகனைக் கொலை செய்த தந்தை, சடலத்தை கழிவறைக்குள் மறைத்து வைத்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

Post a Comment

0 Comments