Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கை விவகாரம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம்

இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் மீண்டும் விவாதம் நடத்தப்படவுள்ளது. எதிர் வரும் மாதத்தில் இந்த விவாதம் நடை பெறவுள்ளது.
ஒரு மாத கால இடைவெளியில் நடைபெறவுள்ள இரண்டாவது விவா தம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி விவாதம் நடை பெறவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றி யம் நீக்கியமை, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கடந்த வாரம் விவாதம் நடத்தப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் கண்காணிப்பு முறைமை குறித்தும் இந்தப் பேச்சின் போது கவனம் செலுத் தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments