மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் கல்வி பயிலும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
\
வவுணதீவு பிரதேசத்தில் நீண்டகாலமாக பல்வேறு அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டுவரும் சிறுவர் நிதியத்தின் ஊடாக இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு கட்டமாக நூறு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு கன்னங்குடா மகா வித்தியாலத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் பேர்னாட் பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஸ்ரீநேசன்,சிறுவர் நிதியத்தின் வவுணதீவு பிரதேச இணைப்பாளர் டிலிமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற 24 மாணவர்கள் துவிச்சக்கர வண்டி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து கால்நடையாக நீண்ட தூரம் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
வவுணதீவு பிரதேசத்தில் இவ்வாறு பின்தங்கிய பகுதி மாணவர்களின் நன்மை கருதி சிறுவர் நிதியம் தொடர்ந்து இவ்வாறு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.















0 Comments