ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞானம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை வெளியிடப்படவிருந்தது. இந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தேர்தலுக்கு 12 நாட்களுக்கு முன்னர் அதாவது எதிர்வரும் 25 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடுவது ஏன் ஒத்திவைக்கப்பட்டது என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரிடம் வினவிய போது, அச்சிடும் பிரச்சினையே இதற்கு காரணம் என தெரிவித்ததுடன் ஏனைய எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
மகிந்த ராஜபக்ஷவின் மகிந்த சிந்தனை மூன்றாம் கால நோக்கு பாதுகாப்பான நாடு மற்றும் பிரகாசமான எதிர்காலம் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாக்குறுதிகளை மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்ப்பதற்காகவே வெளியீடு தாமதாமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்
0 Comments