Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுவிஸ் உதயம் அமைப்பின் மூலம் உதவிகள்

சுவிஸ் உதயம் அமைப்பின் மூலம் உதவிகள் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்த கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த  வருமானம் குறைந்த குடுப்பங்கங்களை ஒன்றிணைத்து ஏற்பாடுசெய்யப்பட்ட விஷேட கலந்துரையாடலும் உதவிகள் வழங்கம் நிகழ்வும் (29.11.2014)சனிக்கிழமைமட்டக்களப்பு லங்கா ரெஸ்டில் இடம்பெற்றது.
கிழக்கு உதயம் அமைப்பின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.விமலநாதன்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்,ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரைசந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமூக சேவையாளருமானகே.துரைநாயகம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்ட இந்நிகழ்வின்போது கிழக்குஉதயம் அமைப்பின் செயலாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான பி.பாலச்சந்திரன்,அமைப்பின் உப தலைவரும் ஓய்வு நிலை அதிபருமான கலாபூஷணம் பாவாணர்அக்கரைப்பாக்கியன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.

                      

Post a Comment

0 Comments