தற்காலத்தில், மிகவும் ஆரோக்கியமாக தோன்றும் மனிதர்களுக்கும் எளிதாக வரக்கூடிய ஆபத்தான வியாதி மாரடைப்பு. உலக அளவில் இந்த பிரச்சனை தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதன் முக்கிய காரணம் இன்றைய உணவுமுறை. மாரடைப்பை தள்ளி வைக்க வேண்டுமெனில், உணவில் கொழுப்பு, உப்பு போன்றவற்றை குறைக்க வேண்டும். நம் உணவில் இவற்றை குறைத்தால், உணவில் சுவையும் அகன்று விடும்.
எனவே ஒரு வயதிற்கு மேல், நீண்ட நாள் வாழ்வதற்காக, சுவை என்ற ஒன்றை நாம் மறந்து விட வேண்டும் என்பது தான் தற்போதைய நிலை என்று கூறலாம். இந்த நிலையை மாற்றி அமைக்க இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழக அறிஞர்கள் ஒரு புதிய வழியை கண்டறிந்துள்ளனர்.
அதாவது மாரடைப்பை தடுக்க தினசரி பிரட்டுடன் ஆலிவ் ஆயிலை நனைத்து சாப்பிட்டாலே போதுமாம். இவ்வாறு செய்தால், வெறும் அறே வாரங்களில் மாரடைப்பு அபாயம் நீங்கி விடும் என்று கூறுகின்றனர் கிளாஸ்கோ அறிஞர்கள்.
இந்த ஆய்வை நிரூபிப்பதற்காக, தன்னார்வலர்களை இரு குழுவாக பிரித்து, ஒரு குழுவிற்கு நாளொன்றுக்கு 20 மிலி ஆலிவ் ஆயில் கொடுத்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், தன்னார்வலர்களின் சிறுநீரில் இருந்து இருதய நோய்க்கான அறிகுறிகள் கணக்கிடப்பட்டன. இதில், ஆலிவ் ஆயில் உட்கொண்டவர்களின் சிறுநீரில் மாரடைப்பு மற்று இருதய நோய்க்கான சாத்தியம் மிகக்குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் ஆலிவ் ஆயிலில் ஒமெகா – 6 என்ற கொழுப்பு இருப்பது தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாகவே ஒமெகா கொழுப்பு, இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.
ஆலிவ் ஆயிலில் ஒமெகா – 6 கொழுப்பு 10 சதவீதம் வரை உள்ளதாம். அதோடு ஒமெகா -3 கொழுப்பும் ஆலிவ் ஆயில்ல் உள்ளது. எனவே இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய்க்கான அபாயத்தை குறைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
0 Comments