ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற வேண்டிய தேவை எமக்கில்லை. இது தொடர்பாக பேச்சு நடத்த எண்ணவுமில்லை. அங்குள்ள மக்கள் எமக்கே வாக்களிப்பர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
|
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எமக்கு தேவையில்லை. அங்குள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பர். வடக்கில் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவு நிச்சயம் எமக்கு கிடைக்கும். ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எந்த விமர்சனத்தையும் நாம் முன்வைக்க முடியாது.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. மேலும் எதிரணியினரின் செயற்பாடுகள் மாறுப்பட்டவையாக இருக்கின்றன. உண்மையில் கூற வேண்டுமென்றால் அவர்கள் பகல்கனவு காண்கின்றனர். என்றார்.
|
0 Comments