மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் இலகுவான முறையில் வைத்தியாலையிலுள்ள சேவை பிரிவுகளை அடையாளம் காண்பதற்கு தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் பெயர் பலகைகள் மற்றும் டி.வீ.டி. பிலேயர் (எண்ணியல் ஒளிக்காட்சி ) என்பன அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்பளிப்பு செய்யப்பட்ட பெயர் பலைகள் மற்றும் டி.வீ.டி. பிலேயர் (எண்ணியல் ஒளிக்காட்சி ) ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன் போது குறித்த பொருட்கள் மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவரும்,சமூக சேவையாளரும்,மட்டு-பிலால் எம்போரியத்தின் உரிமையாளருமான கே.எம்.எம்.கலீலினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பரீட்டிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
0 Comments