உச்ச நீதி மன்றம் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் மூன்றாவது முறையும் தேர்தலில் பங்கு பற்றலாம் என்று அறிவித்துள்ள முக்கியமான தீர்க்கமான காலகட்டத்திலே நாம் இருக்கின்றோம்.

இப்பொழுது ஆடப்படுகின்ற அரசியல் சதுரங்கத்திலே, விளையாடுகிறவர்களாகவும் எந்த நேரத்திலும் வெட்டப்படுகின்ற காய்களாகவும் சிறுபான்மைச் சமூகங்கள் இருந்துவிடக் கூடாது.”என உற்பத்தித் தறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை 11.11.2014 இடம்பெற்ற போது அமைச்சர் பஷீர் சேகுதாவூத் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசியபோது
உச்ச நீதி மன்றம் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் மூன்றாவது முறையும் தேர்தலில் பங்கு பற்றலாம் என்று அறிவித்துள்ள முக்கியமான தீர்க்கமான காலகட்டத்திலே நாம் இருக்கின்றோம்.
அபிவிருத்தியோடு சேர்த்து மக்களுக்கு எதிர்காலம் பற்றிய புரிதலையும் ஏற்படுத்த வேண்டும். இலங்கை மக்கள் இன மத பேதங்களுக்ப்பால் எவ்வாறு வளர்ச்சியடைய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
கொடுத்து எடுக்கின்ற ஒரு விடயம் என்பது அது அரசியலுக்கும் பொருந்தும்.
நாங்கள் எதுவும் தரமாட்டோம் நீங்கள் மட்டும்தான் தந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது எமது அரசியல் கலாசாரத்தோடும் ஊறிப்போன விடயம்.
எனவே இது பற்றியும் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இது அரசியல் சதுரங்கம் விளையாடுகின்ற காலமாக இருக்கின்றது.
அடுத்த வருட முற்பகுதியில் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகின்ற வகையிலே அந்தத் தேர்தலுக்கு முன்பாகவே அரசியல் சதுரங்கப் பலகை தயாராகி விட்டது.
சிறுபான்மை மக்கள் இந்த சதுரங்கத்திலே விளையாடுகின்றவர்களாக இருந்து விடக் கூடாது. அதே நேரம் வெட்டப்படுகின்ற சதுரங்கக் காய்களாகவும் அகப்பட்டு விடக் கூடாது.
தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளராக எந்த சிறுபான்மை வேட்பாளரும் இருக்கப் போவதில்லை.
அதேநேரம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான ஆட்சியிலே இடம்பெறக் கூடிய சமூக பொருளாதார வளர்ச்சியிலே தங்களையும் சேர்த்து அபிவிருத்தி செய்கின்ற தலைவரைத் தேர்ந்தெடுக்கின்ற ஒரு தகைமையை சிறுபான்மையினர் பெற்றுக் கொள்வதற்கு இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த வகையிலே இப்பொழுது ஆடப்படுகின்ற அரசியல் சதுரங்கத்திலே, சிறுபான்iயினர் விளையாடுகிறவர்களாகவும் இருக்க முடியாது, எந்த நேரத்திலும் வெட்டப்படுகின்ற காய்களாகவும் சிறுபான்மைச் சமூகங்கள் இருந்துவிடக் கூடாது.
ஆனால் கட்டாயம் சதுரங்கம் விளையாடத் தெரிந்த பார்வையாளர்களாக இருந்து விடவேண்டும்.
ஏனென்றால், பார்வையாளர்களுக்குத்தான் சதுரங்கத்திலே எந்தத் தரப்பு பிழை விடுகின்றது என்பது தெரிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. அதேபோன்று அவர்கள் செய்கின்ற நல்லது கெட்டது எல்லாமே தெரிந்திருக்கும்.
ஒரு சிறுபான்மைச் சமூகங்களின் மீது அக்கறை கொண்டு அர்ப்பணித்துச் செயற்பட்டு வருகின்ற பிரதி நிதி என்கின்ற வகையில் நான் இதை இந்த சிறுபான்மைச் சமூகங்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
இப்பொழுது அபிவிருத்திக் கனவுகள் நனவாக மாறிவருகின்றன.
இந்த ஆண்டின் அபிவிருத்தித் திட்டங்களை முடிப்பதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டு விட்டது.
அது இங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல நாடு முழுவதும் ஏற்பட்ட பிரச்சினைதான்.
கடந்த ஆண்டுகளிலே எங்களுடைய நிதி ஒதுக்கீடுகள் இலங்கை முழுவதும் செலவு செய்யப்பட்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தன.
இந்த ஆண்டிலே என்ன காரணம் கொண்டும் அபிவிருத்தித் திட்டங்களைப் பிற்போட வேண்டாம் என்றும் அவ்வாறு செய்து விட்டு அபிவிருத்தித் திட்டங்களுக்கான கொடுப்பனவை அடுத்த ஆண்டில் கேட்க வேண்டாம் என்றும் நாங்கள் அரச நிருவாகத்தினருக்கு மிக கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளோம்.
ஒரு சதத்தைக் கூட இந்த ஆண்டின் நிலுவைப் பாக்கியாக வழங்க மாட்டோம் என்பதில் இறுக்கமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செய்து முடிக்கப்பட்ட வேலைக்காக அடுத்த ஆண்டு பணம் கோர முடியாது.
இது விடயமான மிகத் தெளிவான உத்தரவு அரச நிருவாகத்தினருக்கு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எந்த வேலைகளுக்குமான செலவு டிசெம்பெர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன் செலவழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நாட்டிலே அபிவிருத்தி யுகம் என்பது யுத்தத்திற்குப் பிற்பட்ட காலம்தான்.
ஓவ்வொரு வருடமும் அதற்கு முந்திய வருடத்தை விட கூடுதலான வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டின் ஏனைய பகுதிகளை விட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நமது வடக்கு கிழக்குப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதியவர்கள் ஒப்பீட்டளவில் கூடுதலான நிதியை ஒதுக்கியிருக்கின்றார்.
இதுவரையில் நாட்டின் ஏனைய பகுதிகளை விட அபிவிருத்திக்காக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதலான நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ற வகையிலே ஏறாவூர் நகரப் பகுதிக்கும் கணிசமான நிதி கிடைத்திருக்கின்றது.
அதற்காக நாம் ஜனாதிபதிக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்
.இந்நிகழ்வில் உற்பத்தித் தறன் ஊக்குவிப்பு அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ஆர். பொனி, (ஆ.சு. டீழnநெல) இணைப்புச் செயலாளர். ஜே.எம். முஸ்தபா, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்கிரம, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவலிங்கம் திணைக்கள கூட்டுத் தாபனத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments