கிழக்கிலங்கையைச் சேர்ந்த உலமாக்கள் குழுவொன்று இன்று (22) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமைச் சந்தித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிக்க வேண்டுமென்பது குறித்து உலமாக்கள் குழு தங்களது நிலைப்பாட்டை ஹக்கீமுக்கு விளக்கியுள்ளதுடன் கடுமையான அழுத்தங்களையும் பிரயோகித்துள்ளது.
முஸ்லிம் மக்களின் தற்போதைய மனநிலைக்கு ஏற்ப செயற்படுமாறும் அவர்கள் யாரை ஜனாதிபதித் தேர்தலில் அதிகம் விரும்புகின்றனர் என்பது தொடர்பிலும் உலமாக்கள் குழு தங்களது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளது என நம்பகமான தகவல் ஒன்று எனக்கு கிடைத்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஓரிருவர் மட்டுமே அமைச்சர் ஹக்கீமுடன் கலந்து கொண்டிருந்தனர். கொழும்பில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றது
0 Comments